கூட்டுறவு சங்கங்களில் 5% வட்டியில் ரூ.25,000 வரை கடன் வழங்க அரசு உத்தரவு!!
தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் விதவை, கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு கடன் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அவர்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் அதாவது 5% வட்டியில், அவர்களின் பொருளாதார நிலை உயர கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வேளாண்மை கூட்டுறவு கடன்
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கடன் உதவி வழங்கப்படும். ரூ4000க்கும் குறைவான மாத வருமானம் உள்ள அனைத்து கைம்பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்கள் ஆகியோர் இந்த கடன் திட்டத்தின் மூலம் பயனடையலாம். ரூ.5000லிருந்து ரூ.25000 வரை வழங்கப்படும்.
பெறப்பட்ட கடன் தொகையை அதிகபட்சம் 120 நாட்களுக்குள் மாதம் இருமுறை என்ற அடிப்படையில் திருப்பி செலுத்தலாம். தூத்துக்குடியில் அமைந்துள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 26 கிளைகளிலும் இந்த கடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 296 பயனாளிகள் இதன் மூலம் கடன் தொகை பெற்றுள்ளனர்.
பயனடைய தேவையான சான்றுகள்
- விதவைச் சான்று
- விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரரின் ஆதார் கார்டு நகல்
- ஸ்மார்ட் கார்டு நகல் (Ration Card)
- பாஸ்போர்ட் அளவில் 2 புகைப்படம்
இந்த ஆவணங்களை அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சமர்ப்பித்து கிளை மேலாளரை அணுகி கடன் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் படிக்க....
ஒரு ஏக்கருக்கு ரூ.8000 வீதம் விவசாயிகள் 5 ஏக்கருக்கு விண்ணப்பிக்கலாம்! தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!!
30% பணம் செலுத்தினால் போதும் சோலார் பம்பு செட்!! விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கும் அரசு!!
ஒரு ஹெக்டேர்க்கு ரூ.13,400 விவசாயிகள் தாமாகவே முன்வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...