40% அரசு மானியத்தில் சோலார் மின்வேலி விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு!!
திருப்பூர் விவசாயிகள்
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில், மானியத்துடன், சோலார் மின்வேலி அமைக்க மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் விவசாயிகள் வேளாண் பயிர்களை பாதுகாக்க மானியத்துடன் சோலார் மின்வேலி அமைக்கலாம் என தெரிவிக்கப்படடுள்ளது.
சூரிய மின்வேலி ரூ.3 கோடி நிதி
தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காத வண்ணமும், விளைபொருட்களின் மூலமாக கிடைக்கும் வருவாயை பெருக்கிடும் நோக்கத்துடன் சூரியசக்தியால் இயங்கும் சூரிய மின்வேலியை ரூ.3 கோடி மானியத்துடன் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2022-23-ம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.
சூரியஒளி மின்வேலி அமைப்பதனால் விலங்குகள், வேட்டைக்காரர்கள் மற்றும் அன்னியர்களுக்கு மின்வேலியில் செலுத்தப்படும் உயர்மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்து விசை மின் அதிர்ச்சியினால் அசவுகரியம் ஏற்பட்டு விளைபொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படாமல் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பில்லாமல் விவசாயிகளுக்கு கிடைக்க வகை செய்யும்.
40 சதவீதம் மானியம்
ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 ஹெக்டேர் பரப்பு அல்லது 566 மீட்டர் சூரிய மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும். சூரிய மின் வேலி அமைப்பதற்கான செலவு தொகையில் 40 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
5 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க ரூ.2.8 லட்சம், 7 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க ரூ.2.26 லட்சம், 10 வரிசைகள் கொண்ட சூரியமின்வேலி அமைக்க ரூ.2.52 லட்சம் வீதம் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றபடி தேர்வு செய்து கொள்ளலாம் என்று அறிவிகப்பட்டுள்ளது.
இதற்காக உடுமலை பகுதி விவசாயிகள், வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க வசதியாக, சோலார் மின் வேலி அமைக்க விண்ணப்பிக்கலாம்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் விபரங்களுக்கு
மேலும் விபரங்களுக்கு, உடுமலை வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரை 98654 97731 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க....
கூட்டுறவு சங்கங்களில் 5% வட்டியில் ரூ.25,000 வரை கடன் வழங்க அரசு உத்தரவு!!
ஒரு ஏக்கருக்கு ரூ.8000 வீதம் விவசாயிகள் 5 ஏக்கருக்கு விண்ணப்பிக்கலாம்! தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!!
30% பணம் செலுத்தினால் போதும் சோலார் பம்பு செட்!! விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கும் அரசு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...