நிலப்போர்வை அமைக்க முன்வரும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.6400 மானியம் தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!!
திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது. அது என்னவென்றால், தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.1.60 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வசதிக்காக, நிலப்போர்வை அமைக்க ஏக்கருக்கு ரூ. 6,400 வீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, திருப்பூர் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.1.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நிலப்போர்வை அமைத்து காய்கறிகள் மட்டுமல்லாமல் பழ மரங்களையும் சாகுபடி செய்யலாம். தக்காளி, மிளகாய், தர்பூசணி போன்ற பயிர்களுக்கு நிலப்போர்வை முறை நல்ல பலன் தருகிறது.
நீண்டகாலப் பயிர்கள்
இதுதவிர நீண்ட காலப் பயிர்களான வாழை, பப்பாளி, மா, கொய்யா சாகுபடியில் நிலப்போர்வை அமைத்து சிறந்த பலன் பெற முடியும். காய்கறிப் பயிர்களுக்கு ஒரு முறை நிலப்போர்வை அமைத்தால் 3 அல்லது 4 சாகுபடி வரை தொடர்ந்து பயன்படுத்த முடியும். பயிர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ள களைகளைக் கட்டுப்படுத்தும் எளிய யுக்தியாக நிலப்போர்வை உள்ளது.
நுண்ணுயிர்களின் பெருக்கம்
இரவு நேரம் மற்றும் குளிர் காலத்திலும் மண்ணில் சீரான வெப்பத்தை நிலைநிறுத்தி பயிர் சிறந்து வளர்வதற்கும் முளைவிடும் தன்மையை வேகப்படுத்துவதற்கும் உதவுகிறது. நிலப்போர்வை அமைக்கப்பட்ட நிலங்களில் நுண்ணிய தட்ப வெப்பநிலை உருவாவதால் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகரிக்கிறது.
நீர் பாதுகாப்பு
நிலப்போர்வை அமைப்பதால் நீர் நேரடியாக ஆவியாவது தடுக்கப்படுவதுடன், மண்ணின் ஈரப்பதமும் பாதுகாக்கப்படுகிறது. மடத்துக்குளம் வட்டாரத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கான நிலப்போர்வைகள் வழங்கப்படவுள்ளன.இதில் ஒரு ஏக்கருக்கு ரூ. 6,400 வீதம் 25 ஏக்கருக்கு ரூ 1.60 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது.
விவசாயிகளுக்கு சலுகைகள்
இதில் ஆதி திராவிட விவசாயிகளுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள மைவாடி, வேடப்பட்டி, சோழமாதேவி, கடத்தூர் ஆகிய கிராம விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் படிக்க....
ஊடுபயிர் சாகுபடி செய்ய இடுபொருட்கள், நாற்றுக்ககளுக்கு ரூ.12000 மானியம் தோட்டக்கலைத் துறை அறிவிப்பு!!
40% அரசு மானியத்தில் சோலார் மின்வேலி விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு!!
100% மானியத்தில் கருவிகளை பெற ரூ.14.64 கோடி நிதி ஒதுக்கீடு உடனே விண்ணப்பியுங்கள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...