ஒரு எக்டர் நஞ்சை நிலம் இருந்தால் பண்ணையம் அமைக்க ரூ.50,000 மானியம் அறிவிப்பு!!
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பைத் தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தமிழக அரசு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.50,000 மானியம் வழங்க உள்ளது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பேராவூரணி வட்டாரத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, நிலையான வருமானம் கிடைத்திட வழிவகை செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பேராவூரணி வட்டாரத்தைச் சேர்ந்த இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர விரும்பும் விவசாயிகளுக்கு குறைந்தது ஒரு எக்டர் நஞ்சை நிலம் அவரது பெயரில் இருக்க வேண்டும். ஆடு, மாடு, கோழி ஏதும் இல்லாதவராக இருக்க வேண்டும். நெல் சாகுபடி செய்ய வேண்டும். தேனீ பெட்டி, பழ மரக்கன்றுகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்படும். மண்புழு உரத் தொட்டி அமைத்து தரப்படும்.
இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் 2022-23 ஆம் ஆண்டில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சியைத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட திருச்சிற்றம்பலம், வளப்பிரமன்காடு, பின்னவாசல், கல்லூரணிகாடு, தென்னங்குடி, அலிவலம் மற்றும் புனல் வாசல் பஞ்சாயத்துகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
இந்த பஞ்சாயத்துகளில் இருந்து 80 சதவீதம் விவசாயிகளுக்கும், மீதமுள்ள பஞ்சாயத்துகளில் இருந்து 20 சதவீதம் விவசாயிகளும் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு மாட்டு கொட்டகை மற்றும் எருக்குழி அவசியம் இருத்தல் வேண்டும். நேரில் கள ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- கணினி சிட்டா
- அடங்கல் சான்று
- அட்டை நகல்
ஆகியவற்றுடன் பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது அவரவர் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை அணுகி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றவுடன் நேரில் கள ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
சம்பா நெல் பயிர் காப்பீடு!! பயிர் காப்பீடு செய்ய ரூ.2339 கோடி வேளாண்துறை அறிவிப்பு!!
நிலமற்ற விவசாயிகள் விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் தமிழக அரசு அறிவிப்பு!!
ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் பயன்பெற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...