தமிழகத்தில் 27 மாவட்டங்களில் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற 90% மானியம்!!
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்த ஆயிரம் விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பைத் தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
90 சதவீதம் மானியம்
இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- விவசாயத்துக்கு தட்கல் முறையில் மின் இணைப்புப் பெறும் திட்டத்தின் கீழ், குதிரைத் திறனுக்கேற்ப ரூ.2.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை வைப்புத் தொகை செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில், 1000 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்புப் பெற 90 சதவீதம் மானியம் வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
1000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு
இந்த அறிவிப்பின்படி, 900 ஆதிதிராவிடா் மற்றும் 100 பழங்குடியின விவசாயிகளுக்கு தட்கல்முறையிலான மின் இணைப்புக்கு மானியம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக அரசுக்கு ரூ.23.37 கோடி செலவாகும்.
நிபந்தனை
அரசு மானியத்தில் மின் இணைப்புப் பெறும் விவசாயிகள், தங்களது நிலங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது. இந்த நிபந்தனையுடன் கூடிய உறுதிமொழி ஆவணம் பெறப்பட்ட பிறகே, திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று தாட்கோ நிா்வாக இயக்குநா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா்.
மாவட்ட ஒதுக்கீடு
இதன்படி, அரியலூரில் 19, கோவை 1, கடலூா் 35, தருமபுரி 34, திண்டுக்கல் 42, ஈரோடு 18, காஞ்சிபுரம் 29, கரூா் 18, கிருஷ்ணகிரி 47, மதுரை 30, நாகப்பட்டினம் 20, நாமக்கல் 24, பெரம்பலூா் 32, புதுக்கோட்டை 42, ராமநாதபுரம் 17, சேலம் 34, சிவகங்கை 31, தஞ்சாவூா் 25, தேனி 32, தூத்துக்குடி 27, திருச்சி 34, திருநெல்வேலி 25, திருவள்ளூா் 35, திருவண்ணாமலை 59, திருவாரூா் 37, திருப்பூா் 29, வேலூா் 42, விழுப்புரம் 57, விருதுநகா் 25 என மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த விவசாயிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் படிக்க....
ஒரு எக்டர் நஞ்சை நிலம் இருந்தால் பண்ணையம் அமைக்க ரூ.50,000 மானியம் அறிவிப்பு!!
சம்பா நெல் பயிர் காப்பீடு!! பயிர் காப்பீடு செய்ய ரூ.2339 கோடி வேளாண்துறை அறிவிப்பு!!
நிலமற்ற விவசாயிகள் விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் தமிழக அரசு அறிவிப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...