100% மானியத்தில் விதைகள், உரங்கள் மற்றும் நடமாடும் நீர்தெளிப்பான் வேளாண்துறை அறிவிப்பு!!
திருவாரூர் மாவட்டத்தில், உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் அளிக்கப்படும் என்று வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உளுந்து சாகுபடி 100 % மானியம்
இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், செல்வமுருகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உளுந்து சாகுபடி நீடாமங்கலத்தில் வேளாண்மை அறிவியல் நிலையம், தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம், உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், நீர் நுட்ப மையம் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறது.
5 ஏக்கர் வரை பயன்பெறலாம்
தற்போது உளுந்து சாகுபடிக்கு 100 சதவீதம் மானியத்துடன் செயல்படுத்த தயாராக உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் விதைகள், உரங்கள் மற்றும் நடமாடும் நீர்தெளிப்பான் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 1 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்
விவசாயிகள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சிட்டா, அடங்கல் ஒரிஜினல், நில வரைபடம், சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
5 வட்டார சேர்ந்த விவசாயிகள்
இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வட்டார விவசாயிகள் பயன் பெறலாம். மன்னார்குடி,நீடாமங்கலம், நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வட்டார விவசாயிகள் பயன் பெறலாம். மன்னார்குடி வட்டாரத்தில் செருமங்கலம், காரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, ஆலங்கோட்டை, காரிக்கோட்டை, மூவாநல்லூர் மற்றும் துளசேந்திரபுரம்.
நீடாமங்கலம் வட்டாரத்தில் வடுவூர், புதுக்கோட்டை, வடபாதி, தென்பாதி, அக்ரஹாரம், சாத்தனூர், எடமேலையூர், கீழப்பட்டு, அய்யம்பேட்டை, சோனாபேட்டை, கட்டக்குடி, எடஅன்னவாசல், கொத்தங்குடி, காளாச்சேரி, காரக்கோட்டை, ராணிதோப்பு, புளியங்குடி, நெம்மேலி, பருத்திக்கோட்டை, தளிக்கோட்டை, சமையன் குடிக்காடு.
நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டாரத்தில் அணைப்பாடி, மகாராஜபுரம், அகலங்கன், கடுவங்குடி, திருமீயச்சூர், கொத்தங்குடி, செங்காந்தி, பேரளம், திருக்கோட்டாரம், கடகம், சுரைக்காயூர், ஆலத்தூர் மற்றும் வஸ்திராஜபுரம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் மங்கள், கீழக்காடு மற்றும் உதய மார்த்தாண்டபுரம் விவசாயிகள் பயன்பெறலாம்.
மேலும் படிக்க....
அட்மா திட்டத்தில் 50 விவசாயிகளுக்கு அங்கக பண்ணையம் குறித்த விவசாய சுற்றுலா!!
விவசாயிகளுக்கு ரூ.200 கோடி வட்டியில்லாமல் பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...