விவசாயிகளுக்கு ரூ.200 கோடி வட்டியில்லாமல் பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம், நடப்பாண்டு ரூ.200 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வட்டியில்லா பயிர்க் கடன்
மாவட்டத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து விவசாயப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் போதிய அளவு உரம் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு தற்போது வரை ரூ.32.50 கோடிக்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வட்டியில்லா பயிர்க்கடன் பெற்று பயனடைய அனைத்து விவசாயிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடன் தேவையுள்ள விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், 10(1) சிட்டா, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படம் ஆகியவற்றுடன் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரில் விண்ணப்பித்து, பயிர்க்கடன்கள் பெறலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி அறிவித்துள்ளார்.
மேலும், கூட்டுறவு சங்கங்களில் இதுவரை பயிக்கடன் பெறாத விவசாயிகள் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.100 செலுத்தி புதிய உறுப்பினர்களாக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் படிக்க....
198 தொடக்க வேணாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கடன் அறிவிப்பு!!
காட்டு பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை குறைக்கும் இயற்கை முறை காட்டு பன்றி விரட்டி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...