198 தொடக்க வேணாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கடன் அறிவிப்பு!!
திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான பருவமழை துவங்கியுள்ளதால் அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 198 தொடக்க வேணாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது என மண்டல இணைப்பதிவாளர் கோ.காந்திநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 47,551 உறுப்பினர்களுக்கு ரூ. 552.31 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 12,858 புதிய உறுப்பினர்களுக்கு ரூ. 133.27 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டு உள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வழி காட்டுதலின்படி நடப்பு ஆண்டு 12,364 உறுப்பினர்களுக்கு, இதுவரை ரூ.138 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1640 புதிய உறுப்பினர்களுக்கு ரூ.17.26 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டு உள்ளது.
இது கடந்த ஆண்டை விட ரூ.43 கோடி கூடுதலாகும். விவசாயிகளுக்கு கடன்கள் வழங்குவதற்கு தமிழ்நாடு மாவட்ட தொழில்நுட்ப குழுவினரால் 2022-23ம் ஆண்டிற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் சாகுபடியாகும் பல்வேறு பயிர்களுக்கு, கால்நடை வளர்ப்புக்கு, மீன் வளர்ப்புக்கு தேவையான கடன் அளவு, கடன் வழங்கும் காலம், தவணை காலம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு ஏக்கருக்கு
நெல் - ரூ. 31,250, மரவள்ளிக்கிழங்கு- ரூ.32,550, சோளம்- ரூ.9,150, கம்பு- ரூ.9,250, மக்காச்சோளம்- ரூ. 27,000, நிலக்கடலை- ரூ.23,200, நிலக்கடலை மானாவாரி- ரூ.14,350, பருத்தி- ரூ.25,450, முசுக்கொட்டை- ரூ.50,850, வெங்காயம்- ரூ.36,850, மிளகாய்- ரூ.25,300.
தென்னை- ரூ.28,350, மாந்தோப்பு-ரூ.17,900, திராட்சை- ரூ.36,500, கொய்யா- ரூ.49,500, சப்போட்டா- ரூ.19,500, எலுமிச்சை- ரூ.19,750, பிளம்ஸ்- ரூ.26,050, பப்பாளி- ரூ.24,150, வாழை-ரூ.60,900.
கத்திரிக்காய்- ரூ.17,750, சவ் சவ் - ரூ.28,900, காலி பிளவர் - ரூ.23,350, கேரட்- ரூ.22,500, முள்ளங்கி - 18,250, முட்டைக்கோஸ்- ரூ.20,700, தக்காளி- ரூ.26,250, முருங்கை- ரூ.26,550, பீட்ரூட்- ரூ.16,600, உருளைக்கிழங்கு -ரூ.39,500, பாகற்காய் - ரூ.19,520, பீன்ஸ் - ரூ.12,200, பந்தல் அவரை- ரூ.18,650.
மல்லிகை- ரூ.35,500, ரோஜா - ரூ.27,150, சம்மங்கி- ரூ.61,950, மரிக்கொழுந்து - ரூ.20,700, காபி பராமரிப்பு- ரூ.48,700, மிளகு பராமரிப்பு- ரூ.19,850, பூண்டு- ரூ.54,200, அவகோடா- ரூ.16,700.
பயிர்கடன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அனைத்து விவசாயிகளும் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை உரிய ஆவணங்களுடன் அணுகி கடன் பெற்று பயனடையலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் படிக்க....
காட்டு பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை குறைக்கும் இயற்கை முறை காட்டு பன்றி விரட்டி!!
பலவித நோய்களிலிருந்து பாதுகாக்கும் சூடோமோனாஸ் விவசாயிகள் வாங்கி பயன்படுத்த வேண்டுகோள்!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...