வேளாண்துறை சார்பில் 4.42 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
பிரதான் மந்திரி ஃபஸல் பீமா யோஜனா - ராபி 2021-2022 சம்பா நெல் II உரிமைகோரல் பயனாளிகள் பட்டியல்.....
[பகுதி-1 ] Click to download
[பகுதி-2 ] Click to download
[பகுதி-3 ] Click to download
[பகுதி-4 ] Click to download
திருவாரூர் மாவட்டம் PMFBY Village Wise Claim List 2021 Thiruvarur Dist
விழுப்புரம் மாவட்டம் PMFBY Village Wise Claim List 2021 Villupuram Dist
மயிலாடுதுறை மாவட்டம் PMFBY Village Wise Claim List 2021 Mailadudurai Dist
மாவட்ட வாரியான இழப்பீடு பட்டியல் PLEASE DOWNLOAD PMFBY 2021 SAMBA CLAIM LIST PDF
வேளாண்துறை சார்பில் 4.42 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத் தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (11.10.2022) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டில்,
இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறப்பு பருவ (சம்பா நெல் உட்பட இதர) பயிர்களுக்கு 481 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையினை 4 இலட்சத்து 42 ஆயிரத்து 734 விவசாயிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
உழவர்களின் நலனை பேணும் வகையில் இத்துறையை வேளாண்மை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்ததுடன், வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து,
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை கடந்த 2021-22-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் பயனாக, இருபது ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, 2021-22-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 122 இலட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2021-2022-ம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் 37 மாவட்டங்கள் 14 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு, இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம், இப்கோ–டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டது.
2021-2022 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ் சுமார் 40.74 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்காக, 26.06 இலட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர்.
குறுவை (காரீப்) பருவத்திற்கான இழப்பீட்டுத் தொகையாக, 18 கோடி ரூபாய், 21,125 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டு சிறப்பு பருவ (சம்பா நெல் மற்றும் பருத்தி, மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட) பயிர்களுக்கு தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1338.89 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்பட்டது.
இதன் விளைவாக, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையினை விரைவில் வழங்க தமிழ்நாடு அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்து, 2021-2022 ஆம் ஆண்டு சம்பா நெற்பயிர் உட்பட சிறப்புப் பருவ பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக, மொத்தம் 481 கோடி ரூபாய், 4 இலட்சத்து 42 ஆயிரத்து 734 விவசாயிகளுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வினை முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். இயற்கை பேரிடரினால் அடிக்கடி பயிர்கள் பாதிக்கப்படும் நிலையை கருத்தில் கொண்டு நடப்பு 2022-23-ஆம் ஆண்டிலும் ரூ.2,057 கோடி நிதியினை தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக நிதி ஒப்பளிக்கப்பட்டு இதுவரை, 63,331 ஏக்கர் பரப்பளவு 85,597 விவசாயிகளால் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பதிவு செய்து பலனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., இப்கோ–டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் திரு. சிவராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும் படிக்க....
காட்டு பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை குறைக்கும் இயற்கை முறை காட்டு பன்றி விரட்டி!!
பலவித நோய்களிலிருந்து பாதுகாக்கும் சூடோமோனாஸ் விவசாயிகள் வாங்கி பயன்படுத்த வேண்டுகோள்!!
PM Kisan 12-வது தவணைத் தொகை விவசாயிகளுக்கு அக்டோபர் 17 தேதியில் வருகிறது!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...