கும்பகோணம் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு அதிகாரிகள் ஆய்வு!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், அம்மாபேட்டை, திருவிடைமருதூர், பாபநாசம் வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் வினாயகமூர்த்தி மற்றும் கும்பகோணம் விதை ஆய்வாளர் (பொ) நவீன்சேவியர் இன்று (17.10.2022) ஆய்வு மேற்க்கொண்டார்கள்.
நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில், நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில் விவசாயிகள் முழுவீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். விதைப்புக்கு தேவையான விதைகள் இருப்பு வைக்கப்பட்டு அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கும்பகோணம், அம்மாபேட்டை, ஆடுதுறை, இரும்புதலை, திருக்கருக்காவூர், பாபநாசம் பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
விதை சட்டப்படி விதைகள் விற்பனை செய்ய வழங்கப்பட்ட உரிமங்கள், விதை உரிமங்கள் நடப்பில் உள்ள விவரங்கள், சம்பா பருவ விதைகள் இருப்பு, கொள்முதல் செய்யப்பட்ட விதைகளின் இன்வாய்ஸ், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் என ஆய்வு மேற்கொண்டனர். விதைகளின் முளைப்புத்திறன் குறித்து விதை ஆய்வாளர்கள் மூலம் நெல் விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு தஞ்சாவூர் விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும் விதை விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
இந்நிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள் விதை விற்றதற்கான ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். ரசீது இல்லாமல் விற்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ விதைச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை வழங்கினார்.
மேலும் படிக்க....
பலவித நோய்களிலிருந்து பாதுகாக்கும் சூடோமோனாஸ் விவசாயிகள் வாங்கி பயன்படுத்த வேண்டுகோள்!!
PM Kisan 12-வது தவணைத் தொகை விவசாயிகளுக்கு அக்டோபர் 17 தேதியில் வருகிறது!
2022-23 ராபி பருவத்தில் காப்பீடு செய்ய அறிவிப்பு! ஏக்கருக்கு ரூ.29,237 இழப்பீட்டு தொகை!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...