அட்மா திட்டத்தில் 50 விவசாயிகளுக்கு அங்கக பண்ணையம் குறித்த விவசாய சுற்றுலா!!



அட்மா திட்டத்தில் 50 விவசாயிகளுக்கு அங்கக பண்ணையம் குறித்த விவசாய சுற்றுலா!!


தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின்  கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் மதுக்கூர் வட்டாரத்தை சார்ந்த 50 விவசாயிகளுக்கு அங்கக பண்ணையம் குறித்த விவசாயிகள் சுற்றுலா ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்திற்கு  இயற்கை விவசாயி அனைத்து இந்திய விவசாயிகள் சங்க துணை தலைவர் திரு. தன்ராஜ் அவர்களது பண்ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. 



அவர்களது பண்ணையில் தயார் செய்யப்படும் மீன் அமிலத்தினை செயல் விளக்கத்தின் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக செய்து காண்பித்தார். மீன் அமிலம் தயார் செய்வதற்கு ஒரு கிலோ மத்தி  மீன்னிற்க்கு 250 கிராம் பேரிச்சை, ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, அரை கிலோ நோனி பழம் இவை மூன்றையும் ஒன்றாக கலந்து 15 நாட்கள் வைத்து , பின்னர் ஒரு கிலோ மத்தி மீன் ,ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரையுடன் கலந்து 15 நாட்களுக்கு முன்பு தயார் செய்த கலவையுடன் சேர்த்து 48 நாட்கள் கழித்து மீன் அமிலம் பயன்படுத்துவதற்கு தயாராகிறது. 


இதனை தென்னை, நெல், காய்கறி பயிர் ,பயறு வகை பயிர், நிலக்கடலை ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம் இதனால் மகசூல் அபரிவிதமாக அதிகரிப்பதாக கூறினார். யூரியா கரைசல் தயார் செய்தல் இதற்கு 5 கிலோ நாட்டு மாட்டுச் சாணம் மற்றும் 10 லிட்டர் மாட்டு கோமியம் இவை இரண்டையும் ஒன்றாக கலந்து 48 நாட்கள் வைத்து பின்னர் இதனை  உபயோகிப்பதால் யூரியா பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க முடியும் என்று கூறினார். 



இவரிடம் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் நோனி பானம் உள்ளது. இதில் அதிகப்படியான புரதம் ,தாது உப்புக்கள் ,விட்டமின் சி ஆகியவை உள்ளதாகவும் இதனை மத்திய உணவு பரிசோதனை மையத்தின் மூலம் அறிந்து கொண்டதாகவும் கூறினார் .இதனை தினமும் எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுவதாகவும், மன அழுத்தம் ,சர்க்கரை நோய், உடல் எடை ஆகியவற்றை சமநிலையில் வைப்பதாகவும் கூறினார்.


மேலும் இவர் பஞ்சகாவியம், இயற்கை பூச்சி விரட்டி, ஊட்டம் ஏற்றிய தொழு உரம், ஆர்கானிக் கேக் மற்றும் செக்கு தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தயார் செய்து வருகிறார். இனிவரும் காலங்களில் இளைய தலைமுறைகளுக்கு இயற்கையான முறையில் உணவு வழங்க வேண்டும் என்பதை எனது குறிக்கோள் எனவும் விவசாயிகளிடம் அவர்களது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்.



பயிற்சி நிறைவாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமதி.சி.சுகிதா நன்றி கூறினார். சுற்றுலாவிற்கான ஏற்பாட்டினை வேளாண்மை உதவி அலுவலர் பூமிநாதன், ஜெரால்டு ,சுரேஷ் தினேஷ்  , முருகேஷ் உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு .ராஜு மற்றும் திரு .அய்யாமணி ஆகியோர் செய்திருந்தனர்.


மேலும் படிக்க....


கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 3,204 கிராம பஞ்சாயத்துகளில் இந்த ஆண்டு செயல்படுத்த திட்டம்!!


விவசாயிகள் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம்! வேளாண்துறை அறிவிப்பு!!


மாவட்ட அளவிலான மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments