புதுக்கோட்டை மாவட்டத்தில் சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் திடீராய்வு!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (16.11.22) தனியார் விதை விற்பனை நிலையங்களில், சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் வளர்மதி அவர்கள் திடீராய்வு மேற்கொண்டு தரமான விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர்விளைச்சல் தரக்கூடிய, ரகங்களின் விதைகளை அரசு உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
மேலும், புதுக்கோட்டை மாவட்ட விதை ஆய்வாளர்கள், உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகளின் முளைப்பு திறன் மற்றும் தரத்தை உறுதி செய்ய, மாதிரி விதைகளை எடுத்து வருகின்றனர். ஆய்வில், தரமற்ற விதைகள் விற்பனை செய்வது தெரியவந்தால், விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்றார்.
இந்நிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள், விதை விற்றதற்கான ரசீது கட்டாயம் வழங்க வேண்டும், ரசீது இல்லாமல் விற்றால் விதைச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை வழங்கினார்.
தொடர்ந்து குன்றாண்டார்கோவில் வட்டாரத்தில், விதைச்சான்று துறையினரால் மேலப்புதுவயல் கிராமத்தில் 2.5 ஏக்கரில் குணசேகரன் வயலில் ஏடீடி 54 ரக ஆதாரவிதைகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள நெல் விதைப் பண்ணையினை நேரில் பார்வையிட்டு வயல் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தூர்கட்டும் பருவத்தில் உள்ள 56 நாள் வயதுடைய பயிர் என்பதால், ஊட்டசத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தரமான விதை உற்பத்தி முறைகளை கடைபிடித்து நல்ல மகசூல் பெற அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி, வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) மோகன்ராஜ், விதை விதை ஆய்வு ஆய்வாளர்கள், விதை சான்று அலுவலர்கள் மற்றும் விதை பரிசோதனை அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் படிக்க....
டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பொறியியல் துறை மூலம் 50% மானியத்தில் சூரிய வெப்ப காற்று உலர்த்திகள்!!
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...