PM கிசான் திட்டத்தில் 13வது தவணை பெற ஆதாரை விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்! ஒன்றிய அரசு அறிவிப்பு!!


பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே உதவித்தொகை பெற முடியும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழ்நாட்டில் ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டம் பிப்ரவரி 2019ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் மூலம், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 மூன்று தவணைகளில், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.



நடப்பாண்டில், 13வது தவணையாக, அதாவது 2022, டிசம்பர் முதல் 2023 மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத்தொகை பி.எம். கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என ஒன்றிய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. 


அதனால், பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதிசெய்து கொள்ளலாம்.


அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று, தங்களது பெயரை பி.எம்.கிசான் இணை தளத்தில் e-KYC செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம். 



அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை  உறுதி செய்யலாம்.


உங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in  எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை  உறுதி செய்யலாம். எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்ய வேண்டும். 



இதுதொடர்பாக கூடுதல் விவரம் ஏதும் அறிய விரும்பினால், உங்கள்  வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க....


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் 38,216 ஹெக்டேர் பாதிப்பு! கணக்கெடுக்கும் பணிகள் விரைந்து முடிக்க அதிகாரிகள் திட்டம்!!


விவசாயிகளுக்கு 10 HP சோலார் பம்ப்செட் 90% மானியம் வேளாண் துறை அசத்தல்!!


காட்டு பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை குறைக்கும் இயற்கை முறை காட்டு பன்றி விரட்டி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post