தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் 38,216 ஹெக்டேர் பாதிப்பு! கணக்கெடுக்கும் பணிகள் விரைந்து முடிக்க அதிகாரிகள் திட்டம்!!


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையினால் நேற்று வரை 38,216 ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டு முழுவதும் இயல்பாக 937.50 மிமீ மழை பெய்கிறது. இதில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலத்தில் 448 மி.மீ. (48%) மழை பெய்யும். அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 17ம் தேதி வரை இயல்பாக பெய்ய கூடிய 288.3 மி.மீட்டருக்கு 327.9 மி.மீ. மழை அதாவது 14 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளது. 


குறிப்பாக மயிலாடுதுறை  மாவட்டத்தில் 722.1 மி.மீ, செங்கல்பட்டு மாவட்டத்தில் 516.7 மி.மீ, கடலூர் மாவட்டத்தில் 485.9 மி.மீ பெய்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது.



இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் மயிலாடுத்துறை, சீர்காழி, கும்பகோணம் போன்ற மாவட்டத்தில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதையடுத்து   முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடுகள், பயிர்கள் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் நிவாரணம் வழங்கினார். மேலும் வீடுகள் சேதமைடந்தவர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. 


அதைப்போன்று மழை அதிகம் பெய்த மாவட்டங்களில்ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு கணக்கெடுக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செயலாளர் சமயமூர்த்தி ஆகியோரது தலைமையில் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், டெல்டா பகுதி விவசாயிகள்  கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது தெரியவந்தது. 



தமிழகம் முழுவதும் 50 ஆயிரம்  ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.  இந்நிலையில் தமிழகத்தில்  33 சதவீதம் வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று  வரை (நவ.24) 38,216 ஹெக்டேர் பரப்பளவு பாதிப்படைந்துள்ளது.


இதில் அதிகபடியாக மயிலாடுத்துறை, கடலூர், திருவாரூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில்  ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேல் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் மழையால் வரலாறு காணாத வகையில் ஒரேநாளில் 44 செ.மீ. மழை பெய்தது. கடும் மழை காரணமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. 


சுமார் 33,340 ஹெக்டேரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 2,511 ஹெக்டேர், திருவாரூர் மாவட்டத்தில் 404 ஹெக்டேர், அரியலூர் மாவட்டத்தில் 334 ஹெக்டேர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 317 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.



மேலும் தொடர்ந்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் கணக்கெடுக்கும் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு எத்தனை ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. 


அதற்கு ஒன்றிய அரசிடம் நிவாரணமாக எவ்வளவு கேட்கலாம் என்று அறிக்கைகள் தயார் செய்து முதல்வரிடம் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து ஒன்றிய அரசிடம் பயிர்கள் சேதத்திற்கான நிவாரணம் கேட்கப்படும்.



மேலும் படிக்க....


புதுக்கோட்டை மாவட்டத்தில் சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் திடீராய்வு!!


டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பொறியியல் துறை மூலம் 50% மானியத்தில் சூரிய வெப்ப காற்று உலர்த்திகள்!!


தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post