கூடுதல் விலைக்கு நிலக்கடலை விற்பனை செய்யும் தனியார் விதை விற்பனையாளர்கள்!! தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை!!


கூடுதல் விலைக்கு நிலக்கடலை விற்பனை செய்யும் தனியார் விதை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்  - தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு கார்த்திகை பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயாராகி வருகிறார்கள்.   


விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானது. தரமான விதைகளை சரியான விலையில் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.    



விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர்விளைச்சல் தரும் இரகங்களின் விதைகளை அரசு உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


கடந்த 15.11.2022 முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில், விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர். விநாயகமூர்த்தி தலைமையில் சிறப்பு விதை ஆய்வு குழு அமைக்கபட்டு ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மாரியம்மன் கோவில், தஞ்சாவூர், கொடிமரத்துமூலை உட்பட்ட இடங்களில்  24 தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 18.11.22 அன்று பட்டுக்கோட்டையிலும், 19.11.22 அன்று ஒரத்தநாடு மற்றும் 21.11.22 அன்று தஞ்சாவூர் பகுதிகுட்பட்ட இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 



அப்போது, தனியார் விதை விற்பனையாளர்கள் மற்றும் நிலக்கடலை வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில், விதைச்சட்ட விதிகளின் படி நிலக்கடலை விதை விற்பனை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டு அரசின் விதை உரிமங்கள் பெற்று, சான்று பெற்ற மற்றும் சான்று அட்டை பொருத்தப்பட்ட விதைகளை மட்டுமே விசாயிகளுக்கு விற்பனை செய்திட எச்சரிக்கை வழங்கப்பட்டது.


நிர்ணயிக்கப்பட்ட விலையில் நிலக்கடலை விற்பனை மேற்கொள்ளவும் கூடுதல் விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நேரடி ஆய்வுகள், ஆலோசனை கூட்டங்கள் மற்றும் பத்திரிக்கை செய்திகள் வாயிலாக எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது. 



தஞ்சாவூர் மாவட்டத்தில், மாவட்ட தனியார் விதை விற்பனையாளர்கள் விதைச்சட்ட விதிகளின் படி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகள் குறித்து விதைச்சட்ட விதிகள் உள்ளடக்கிய பிரசுரம் அச்சடிக்கப்பட்டு ஆய்வின் போது வழங்கப்பட்டது.



இன்று மீண்டும் தொடர் நடவடிக்கையாக, 22.11.2022 அன்று ஒரத்தநாடு வட்டாரத்தில், தனியார் விதை விற்பனை நிலையங்களில் நேரடி ஆய்வில் விதை விற்பனையாளர்கள் கடை பிடிக்க வேண்டிய விதைச்சட்ட விதிகளான விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன்படி விதை விற்பனை மேற்கொள்ள எச்சரிக்கை வழங்கப்பட்டது. 


ஒரத்தநாட்டை தொடர்ந்து, திருக்கானூர்பட்டி, மருங்குளம், பட்டுக்கோட்டை பகுதிகளில்  12 விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு விதை சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட நிலையங்களில், 4 எண்ணிக்கையிலான நிலக்கடலை,  நெல் மற்றும் உளுந்து விதை குவியல்களுக்கு விதைச்சட்டம் 1966 மற்றும் விதை விதிகள் 1968 கீழ் ரூ. 10.28 லட்சம் மதிப்புள்ள 11.48 மெ.டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. 



இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் வினாயகமூர்த்தி, விதை ஆய்வாளர்கள் முனியய்யா, நவீன்சேவியர் மற்றும் பாலையன்  ஆகியோர் உடன் இருந்தனர்.


மேலும் படிக்க....


புதுக்கோட்டை மாவட்டத்தில் சென்னை விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் திடீராய்வு!!


டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பொறியியல் துறை மூலம் 50% மானியத்தில் சூரிய வெப்ப காற்று உலர்த்திகள்!!


தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post