சொட்டு நீர் பாசன அமைக்க மானியம் | விவசாயிகள் மானியம் பெற அழைப்பு!!


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு துளி அதிகப்பயிர் ( திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.



இத்திட்டத்தின் கீழ் இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூ.26.57 கோடி நிதி இலக்கு பெறப்பட்டு ரூ.19.47 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,781 எக்டர் பரப்பில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.


பொய்த்துப்போன பருவமழை
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மழையளவு 30 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இதனால் வரும் காலத்தில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு, மரவள்ளி, மக்காச்சோளம் போன்ற நீண்ட காலபயிர்கள் வறட்சியினால் பாதிக்கப்படும். மேலும் உளுந்து, நிலக்கடலை, காய்கறி போன்ற குறுகிய காலபயிர்கள் சாகுபடி செய்ய இயலாத சூழ்நிலைகள் ஏற்பட உள்ளது.

எனவே தற்போது உள்ள நிலத்தடி நீரினை, சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதால் நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டு பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்படுவதை முழுவதுமாக தவிர்க்க முடியும். வாய்க்கால் மூலம் நீர் பாசனம் செய்வதனை முழுமையாக தவிர்த்து அரசு அளிக்கும் மானிய உதவியுடன் சொட்டுநீர் பாசனம் அமைப்பு மூலம் நீர் அளிக்க அனைத்து விவசாயிகளுக்கும் வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளது.
சொட்டுநீர் பாசனம் அமைப்பின் நன்மைகள்
சொட்டுநீர் பாசனம் அமைப்பதால், தண்ணீர் தேவையான அளவு மட்டும் பயிர்களுக்கு பாய்ச்சப்படுவதால் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. உரங்கள் தண்ணீர் மூலம் அளிக்கப்படுவதால் உரங்கள் வீணாவது தவிர்க்கப்பட்டு உரத்திற்கான செலவுகள் குறைகிறது. பூச்சி தாக்குதல் மற்றும் நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. நீர்ப்பாசனம் செய்ய வேலையாட்கள் செலவு குறைகிறது. அதிக மகசூல் கிடைக்கிறது.
தேவைப்படும் ஆவணங்கள் சொட்டுநீர் பாசனம் அமைக்க,
சிட்டா,
நிலவரைபடம் (FMB),
அடங்கல்,
ஆதார் அட்டை நகல்,
ரேஷன் அட்டை நகல்,
வங்கி புத்தக நகல்,
சிறு விவசாயி சான்று,
மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை


 மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS

உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை அலுவலகத்தினை விவசாயிகள் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க....


விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்பத்திற்கான இடுபொருள் உற்பத்தி பயிற்சி!!


கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுக்களுக்கு பயிற்சி!!


விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post