அட்மா திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களை ஊக்குவித்தல் குறித்த பண்ணை பள்ளி!!
வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தில் ஒருங்கிணைந்த முறையில் நெல் சாகுபடி மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களை ஊக்குவித்தல் குறித்த ஆறு நாட்கள் நடைபெறவிருக்கும் பண்ணை பள்ளி முதல் வகுப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் வட்டாரத்தில் அண்டமி கிராமத்தில் இன்று தொடங்கியது.
இப்பண்ணை பள்ளியில் தொடக்கத்தில் விவசாயிகளுக்கு முன் மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டது. வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் சாக்கோட்டை திருமதி. பாலசரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு உயிரி உரங்கள் பயன்பாடு, பசுந்தால் உர பயிர் சாகுபடி, தொழு உரம் இடுதல் போன்ற நஞ்சில்லா சாகுபடியினை மேற்கொண்டு மண்வளம் மேம்படுத்திட கேட்டுக் கொண்டார். வேளாண்மை உதவி இயக்குனர் மதுக்கூர் திருமதி .எஸ். திலகவதி அவர்கள் தற்சமயம் உள்ள அரசு மானியத் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தார்.
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் பட்டுக்கோட்டை பயிர் இனப்பெருக்க துறை இணை பேராசிரியர் முனைவர் .சித்ரா அவர்கள் நெல் ரகங்கள் தேர்வு செய்தல், விதை நேர்த்தி, உயிர் உர பயன்பாடு மற்றும் பூஞ்சான கொல்லிகள் பயன்பாடு குறித்து மற்றும் இதை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கமான முறையில் எடுத்துரைத்தார் . மேலும் விவசாயிகளை நெல் வயலுக்கு அழைத்துச் சென்று பூச்சி மற்றும் நோய் குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக காண்பித்து விளக்கம் அளிக்கப்பட்டது மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
இப்ப பண்ணை பள்ளியின் நிறைவாக வேளாண்மை உதவி அலுவலர் திரு. பூமிநாதன் அவர்கள் விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார். பயிற்சிக்கான ஏற்பாட்டினை வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமதி. சி .சுகிதா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் திரு. அய்யாமணி மற்றும் திரு. ராஜு ஆகியோர் செய்து இருந்தனர். வேளாண்மை திரு .இளங்கோ மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் திரு. முருகேஷ் ஆகியோர் பண்ணை பள்ளியில் கலந்து கொண்டனர்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்பத்திற்கான இடுபொருள் உற்பத்தி பயிற்சி!!
கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுக்களுக்கு பயிற்சி!!
விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...