உருவாகிறது டானா புயல்! தமிழகத்தில் 5/6 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை தொடரும்!!
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது நன்கமைந்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி, தீவிரப்புயலாக அக்ட் 24ம் தேதி இரவு ஒடிசா மற்றும் வங்கதேசம் இடையே மேற்குவங்கத்தின் சுந்தரவன காடுகள் பகுதியில் கரையை கடக்க கூடும்.
இப்புயல் தமிழகத்தை விட்டு அகன்று சென்றாலும், வளிமண்டலத்தில் நிலவும் காற்று வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை அடுத்த 5-6 நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (21.10.2024) முதல் (23.10.2024) வரை
வலுகுறைந்த கீழைக்காற்று மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் காற்று நிலையற்ற தன்மை காரணமாக டெல்டா, மத்திய கடலோரம் மற்றும் மேற்கு/கொங்கு/தென் மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழையும் ஒரிரு இடங்களில் மிக கனமழையும் பதிவாகும்.
அதிகாலை, முற்பகல்/பிற்பகல் நேரத்தில் (அதிகாலை 4 மணிக்கும் பிற்பகல் 2 மணிக்கும்) இடைப்பட்ட நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யும்.
டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் அடுத்த மூன்று நாட்களில் பகலில் இடிமழை வாய்ப்பு உள்ளது என்பதை மனதில் வைத்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் அறுவடை பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாலை/இரவு/நள்ளிரவு நேரத்தில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மேற்கு/கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் மாலை/இரவு/நள்ளிரவு நேரத்தில் இடி,மின்னலுடன் கூடிய மழையும், ஒருசில இடங்களில் மிககனமழையும் பதிவாகும். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், பல்லடம், ஆனைமலை, உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரங்களில் இடி மழை வாய்ப்பு உள்ளது.
(24.10.2024) முதல் (27.10.2024) வரை
புயல் வடக்கே செல்வதால் ஈரப்பதமான மேற்கு காற்றை தமிழக ஊடாக ஈர்க்கும். இதன் காரணமாக மாலை/இரவு/நள்ளிரவு நேரத்தில் உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் பரவலாக இடி,மின்னலுடன் கூடிய மழையை எதிர்ப்பார்க்கலாம்.
குறிப்பு
மழையின் போது இடி,மின்னல் வலுவாக இருக்கும், அதேபோல மழை மாவட்டம் முழுதும் பரவலாக பெய்யாது, பெய்யும் இடத்தில் வலுத்து பலத்த மழையாக பதிவாகும்.
மேலும் படிக்க....
மதுக்கூர் வட்டார வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சுஜாதா ஆய்வு!!
வளமான பயிரை உருவாக்கி நஞ்சில்லா உணவளிக்கும் உழவர் வயல்வெளி பள்ளி!!
விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...