தரமான விதை உற்பத்தி செய்திட விதை பண்ணை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி!!

பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரத்தைச் சேர்ந்த விதை பண்ணை விவசாயிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறை மூலம் ஒரு நாள் தொழில்நுட்ப பயிற்சி பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 24 .10 .24 இன்று வழங்கப்பட்டது. தஞ்சாவூர் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம் )திருமதி ச.மாலதி அவர்கள் பயிற்சிக்கு தலைமையேற்று தற்போது நடைமுறையில் உள்ள மத்திய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
இப்பயிற்சியில் தஞ்சாவூர் விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குனர் திரு .து.கோபாலகிருஷ்ணன் அவர்கள் விதை பண்ணைகளில் களை நிர்வாகம் , உரம் மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்த தொழில்நுட்பங்களை கூறி அவற்றை உரிய காலத்தில் தகுந்த அளவில் பயன்படுத்தி விதை பண்ணை விவசாயிகள் கூடுதல் மகசூல் பெற்று லாபம் பெற வேண்டும் என்றும் அறுவடைக்குப்பின் விதை குவியல்களை முளைப்புத் திறன் பாதிக்காத வண்ணம் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.


பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ)செல்வி .சன்மதி அவர்கள் விதைப்பண்ணை விவசாயிகளுக்கு மாநிலத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மானியத்தில் வழங்கப்படும் இடுபொருட்கள் குறித்தும் மேலும் மண்ணின் வளத்தை மேம்படுத்தி தரமான விதை உற்பத்திக்கு வழி வகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பட்டுக்கோட்டை விதை ஆய்வாளர் முனைவர். எம். நவீன் சேவியர் அவர்கள் நெல் சாகுபடி செய்ய பருவத்திற்கு ஏற்ற உயர் விளைச்சல் தரும் நெல் ரகங்கள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார் .
பட்டுக்கோட்டை வேளாண் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் திருமதி .சுபா அவர்கள் விதை உற்பத்தி முறைகள் மற்றும் விதை பெருக்க நிலைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.



தஞ்சாவூர் ரிலையன்ஸ் பவுண்டேஷன் திட்ட மேலாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் நெற்பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
பட்டுக்கோட்டை விதைச்சான்று அலுவலர் திருமதி .சா.சங்கீதா அவர்கள் விதைப்பண்ணையில் கலவன்கள் இல்லாமலும் புறத்தூய்மை மற்றும் இனத்தூய்மை , முளைப்புத்திறன் பாதிக்காதவாறு தரமான விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும். மேலும் தரமான விதைகளை உற்பத்தி செய்ய கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கினார்.
இப்பயிற்சியில் பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து விதைப்பண்ணை விவசாயிகளும் கலந்து கொண்டனர். பயிற்சியில் கண்காட்சி அமைக்கப்பட்டு விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி விதை அலுவலர்கள் பட்டுக்கோட்டை வட்டார திரு .ஜெய்சங்கர் , திரு. வீரசிங்கம் மற்றும் மதுக்கூர் வட்டார உதவி விதை அலுவலர்கள் திரு .பூபேஷ் , திரு .இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர். தகவல் வெளியீடு

திரு .து. கோபாலகிருஷ்ணன் 

விதைச்சான்று மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறை உதவி இயக்குனர் 

 தஞ்சாவூர்


மேலும் படிக்க....


மதுக்கூர் வட்டார வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சுஜாதா ஆய்வு!!


வளமான பயிரை உருவாக்கி நஞ்சில்லா உணவளிக்கும் உழவர் வயல்வெளி பள்ளி!!


விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post