மஹிந்திரா டிராக்டர்ஸ் மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா விருது-2024!!
மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா (எம்எஃப்ஓஐ) விருதுகள் 2024 பெற்ற மதுக்கூர் அத்திவெட்டி கிராம இளம் விவசாயி கார்த்தி, மஹிந்திரா டிராக்டர்ஸ் மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா விருது-2024: மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா (எம்எஃப்ஓஐ) விருதுகள் 2024 இன்று புது டெல்லியில் உள்ள புசாவில் உள்ள புகழ்பெற்ற ஐஏஆர்ஐ மைதானத்தில் தொடங்கியது. இந்த வரலாற்று நிகழ்வு முற்போக்கு விவசாயிகளின் குறிப்பிடத்தக்க சாதனைகளை கொண்டாடுகிறது.
மற்றும் விவசாயத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகளை காட்டுகிறது. கிருஷி ஜாக்ரன் ஏற்பாடு செய்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) இணைந்து நடத்துகிறது மற்றும் மஹிந்திரா டிராக்டர்ஸ் நிதியுதவியுடன், மூன்று நாள் நிகழ்வு விவசாயத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க உலகளாவிய தலைவர்கள், விவசாய முன்னோடிகள் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இந் நிகழ்வில் மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டு கிராமத்தை சேர்ந்த முற்போக்கு இயற்கை விவசாயி இளைஞர் கார்த்தி அவர்கள்
விழா குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு டிசம்பர் 1ஆம் தேதி புதுடில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பரிசு மற்றும் சான்றிதழ் முன்னாள் மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபலானி அவர்கள் கையினால் விருது பெற்றுள்ளார். தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 17 விவசாயிகளில் டெல்டா பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இளம் விவசாயி கார்த்தி அவர்கள் விருது பெற்றதை மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் இன்றைய தினம் பாராட்டி சிறப்பித்தனர். கார்த்தி அவர்கள் இயற்கை விவசாயத்தின் மூலம் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் படிக்க....
மதுக்கூர் வட்டார வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சுஜாதா ஆய்வு!!
வளமான பயிரை உருவாக்கி நஞ்சில்லா உணவளிக்கும் உழவர் வயல்வெளி பள்ளி!!
விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...