தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி!!


தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டாரம் மதுரபாசாணிபுரமா கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி.


மதுக்கூர் வட்டாரம் மதுரபாசானிபுரம் கிராமத்தில் நூறு விவசாய தொழிலாளர்களுக்கு திருந்திய நெல் சாகுபடி குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சுஜாதா அவர்கள் தலைமையில் மதுரபாசானிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையிலும் நடைபெற்றது.


பயிற்சியில் கலந்து கொண்ட விவசாய தொழிலாளர்களுக்கு திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்வதன் முக்கியத்துவம் அதன் மூலம் கிடைக்கும் அதிகமகசூல் மற்றும் பூச்சி நோய் கட்டுப்பாட்டில் திருந்திய நெல் சாகுபடியின் பங்கு பற்றி வேளாண் துணை இயக்குனர் சுஜாதா விளக்கி கூறினார்.





வேளாண் உதவி இயக்குனர் திலகவதி விவசாயிகள் மேற்கொள்ளும் பழைய முறையில் ஆன நடவுக்கும் வரிசை நடவுக்கும் திருந்திய நெல் சாகுபடி மூலம் நெல் நடவு செய்யும் போது கிடைக்கும் நன்மைகள் குறித்து வயல்வெளியில் களப்பயிற்சி அளித்தார். ஆத்மா திட்ட அலுவலர் சுகிதா மற்றும் ராஜு உயிர் உரம் மற்றும் சூடோமோனஸின் நன்மைகள் குறித்து செயல் விளக்கமாக செய்து காட்டினார்.


மதுரபாசணிபுரம் பெண் விவசாயிக்கு கலைஞர் திட்டத்தின் கீழ் வேளாண் இணை இயக்குனர் மானியத்தில் 16 லிட்டர் பவர் ஸ்பிரேயர் வழங்கினார். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சூடோமோனஸ் உயிரியல் கட்டுப்பாட்டு காரணி 100 மதிப்பில் அனைவருக்கும் வேளாண் துணை இயக்குனர் சுஜாதா மற்றும் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வழங்கினார்.




உதவி விதை அலுவலர் இளங்கோ நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க....


மஹிந்திரா டிராக்டர்ஸ் மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா விருது-2024 !!


தரமான விதை உற்பத்தி செய்திட விதை பண்ணை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி!!


PMFBY 2023-24 உங்கள் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் இழப்பின் சதவீதம் மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள கிராமம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post