விவசாயிகளுக்கு நெல், உளுந்து, கடலை, எள் போன்ற தரமான விதைகள் குறைவான விலையில்!!


விவசாயிகளுக்கு தரமான விதைகள் குறைவான விலையில் நிறைவான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய விதை கிராமத் திட்டத்தில் பங்கு பெறுவீர் பயனடைவீர். 


வேளாண் துணை இயக்குனர் மாநிலத் திட்டம் சாருமதி அறிவுரை 
மதுக்கூர் வட்டாரம் அண்டமி மற்றும் நெம்மேலி கிராமங்களில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2017-18 மற்றும் 2018 19 ஆம் ஆண்டின் கீழ் அமைக்கப்பட்ட விதை கிராமத் திட்ட குழு உறுப்பினர்களுக்கான 
புத்தூட்ட  பயிற்சி அண்டமியில் உத்திராபதி கோவிலில் குழு தலைவர் குப்புசாமி ஒருங்கிணைப்புடன் நெம்மேலி கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் விதை கிராம குழு தலைவர் பெரமையன் ஒருங்கிணைப்புடன் நடைபெற்றது. 




இப் பயிற்சியில் தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மாநிலத் திட்டம் சாருமதி அவர்கள் கலந்து கொண்டு விவசாயத்தின் அடிப்படையான தரமானவிதை ரகங்களை குறைந்த விலையில் நிறைவான அளவில் உற்பத்தி செய்து விநியோகிப்பதில் விதை கிராம குழு உறுப்பினர்களின் பங்கு அதிகமாகும். 


விதை கிராமகுழு உறுப்பினர்களுக்கு உரிய தொழில்நுட்ப பயிற்சி அளிப்பதன் மூலம் தரமான விதை கிடைப்பதை உறுதி செய்ய முடியும். மேலும் நெல் உளுந்து கடலை எள் போன்ற விதைகளை தங்கள் தேவைக்கும் தங்கள் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கும் மற்றும் அடுத்த கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட காலத்தில் உரிய விலைகளில் பரிமாறிக் கொள்கின்றனர். 


இதன் மூலம் கிராம அளவில் விதை தேவையில் சுயசார்பு மற்றும் தன்னிறைவு அடைய முடியும். சந்தை விலையை விட குறைவான விலையில் விதைகள் கிடைக்கும். விற்பனையாளர் மற்றும் நுகர்வோர் சமமாக பயனடைகின்றனர். விதை கிராம உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து விதை உற்பத்தி செய்யும் பொழுது தடுப்பு இடைவெளி குறையலாம். பண்ணை எந்திரங்கள் பயன்படுத்துவதும் அறுவடைக்குப் பின் விதைகளை கையாளுவதும் சுலபமாகும். 



ஒரே ரகத்தை பயிரிட்டு உற்பத்தி செய்வதால் பலரக விதைக்கலப்பு தவிர்க்கப்படுகிறது. விதைச்சான்று துறையின் மூலம் விதைப்பண்ணையை கண்காணிப்பதும் எளிது. ஒருங்கிணைந்து இடுபொருள் வாங்குவதன் மூலம் விவசாயிகளின் உற்பத்தி செலவினமும் குறைகிறது. 


எனவே விதை பண்ணை அமைக்கும் விவசாய உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து தரமான விதைகளை உற்பத்தி செய்து அரசுக்கும் கொடுக்கலாம். தனியாருக்கும் விற்பனை செய்யலாம். அல்லது மண்ணச்சநல்லூர் சம்பா போல நெம்மேலி சம்பா என்ற தனிப் பெயருடன் விதை விற்பனையிலும் ஈடுபடலாம் என விவசாயிகளை கேட்டுக்கொண்டார். பட்டுக்கோட்டை விதைச்சான்று அலுவலர் சங்கீதா விதை பண்ணை உற்பத்தியில் ஈடுபடும்போது விதைப்புக்கு முன் தடுப்பு இடைவெளி விதைப்பு முறைகள் விதை நேர்த்தி போன்றவை பற்றி எடுத்துக் கூறினார். 


எந்த ஒரு ரகத்தையும் அதன் பூக்கும் பருவத்தில் மிக எளிதாக பிறரக கலப்பை கண்டறிந்து நீக்க முடியும்.. கலவன்களை நீக்கிய பின் உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டு தரமான விதை கிடைப்பதை விதை உற்பத்தியாளர் உறுதி செய்திட வேண்டும். 


அறுவடைக்குப் பிறகு விதைகளை சுத்தம் செய்தல் சரியான ஈரப்பதத்தில் பராமரித்து தரம் பிரித்து விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி உரிய தர பரிசோதனைகளை மேற்கொண்டு முளைப்புத்திறனை உறுதி செய்திட வேண்டும். போன்ற விவரங்களை விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். 



வேளாண்மை அலுவலர் சரவணன் விவசாயிகள் பதிவு குறித்து எடுத்துக் கூறி பதிவு செய்யாத விவசாயிகள் உடன் பதிவு செய்திட கேட்டுக்கொண்டார். வேளாண்மை உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி இயற்கை இடுபொருள் பயன்படுத்தி விவசாயம் செய்வது பற்றி எடுத்துக் கூறினார். ஆத்மா திட்ட அலுவலர் சுகிர்தா பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளை பதிவு செய்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மதுக்கூர் வேளாண்மை உதவி அலுவலர் பூமிநாதன் மற்றும் கீழக்குறிச்சி வேளாண்மை உதவி அலுவலர் முருகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க....


அட்மா திட்டத்தின் கீழ் கிசான் கோஸ்திஸ் உழவர் வயல் தின விழா!!


மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர்!!


விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post