சம்பா நெல் மற்றும் ராபி பருவத்திற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு!!



செங்கல்பட்டு மாவட்டத்தில், சிறப்பு பருவம், சம்பா நெல் மற்றும் ராபி பருவத்திற்கு, மத்திய, மாநில, அரசின் திருந்திய, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


இத்திட்டத்தில், கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிரான சம்பா நெல், வேர்க்கடலை, கரும்பு பயிர்களை பயிரிடும் விவசாயிகள் அனைவரும் சேர தகுதி உள்ளவர்கள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.



குத்தகைக்கு பயிர் செய்யும் விவசாயிகள் உட்பட அனைவரும் சேரத் தகுதி உள்ளவர்கள் ஆவர். பயிர் கடன் பெறும் விவசாயிகள், அவர்களின் விருப்பத்தின்படி, கடிதம் கொடுத்தும், பயிர் கடன் பெறாத விவசாயிககள் தங்களின் விருப்பத்தின்படியும் சேரலாம்.


விதைக்க, நடவு செய்ய இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்து விடுதல், இயற்கை இடர்பாடுகள், இடர் துயர் அபாய நிகழ்வுகள், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு போன்றவைகளுக்கு, இழப்பீடு வழங்கப்படும்.



மாவட்ட விவசாயிகள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி., தகவல்களுடன் கூடிய வங்கி புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சிட்டா, நடப்பு சாகுபடி அடங்கல் முன்மொழிவு படிவம் மற்றும் விவசாய பதிவு படிவம் ஆகியவற்றுடன், காப்பீட்டு பிரீமியத் தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தி பயன் பெறலாம்.


மேலும், விரிவான விபரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் பிரீமியத் தொகையை செலுத்தி, பயிர் காப்பீடு செய்து, விவசாயிகள் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க....


விவசாயிகளுக்கு ரூ.200 கோடி வட்டியில்லாமல் பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்!!


PM Kisan: 12ஆவது தவணை ரூ.2000 வரவில்லையா? - இதை உடனடியாக செய்யுங்கள்!


கும்பகோணம் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு அதிகாரிகள் ஆய்வு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments