புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு!!
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு விதை சான்று துறையின் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் விநாயகமூர்த்தி அவர்கள் இன்று (10.08.22) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அன்னவாசல், விராலிமலை வட்டாரங்களை சேர்ந்த வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகளை எவ்வாறு செயல் படுத்துகின்றனர் என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு மேற்கொண்டு நடந்து வரும் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து வேளாண் உதவி அலுவலர் வாரியாக ஆய்வு செய்தார். அப்பொழுது அவர் வேளாண் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் அனைத்து திட்டங்களையும் திருப்தியாகவும் நேர்த்தியாகவும் விவசாயிகளுக்கு ஏற்ற நேரத்தில் கிடைக்கும் வகையிலும் செயல்படுத்திட கேட்டுக் கொண்டார்.
ஆய்வுக் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன், வேளான்மை துணை இயக்குனர் பெரியசாமி, வேளாண்மை அலுவலர் வீரமணி, விதை ஆய்வாளர்கள் பாலையன், நவீன் சேவியர் ஆகியோர் உடன் இருந்தனர். விராலிமலை மற்றும் அன்னவாசல் வட்டார அலுவலர்களிடம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்தல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டார்.
தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட கிராங்களில், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்த இனங்களின் தேவை விபரம், வழங்கியுள்ள விவர அறிக்கையினை வட்டார வளர்ச்சி அலுவலர் உடன் இணைந்து நிதி தேவையுடன் அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டார்.
ஆய்வுக் கூட்டத்திற்கு பின், கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விராலிமலை வட்டாரம், தன்னங்குடி தொகுப்பு மற்றும் வெம்மணி தொகுப்பு இடத்தை நேரடியாக ஆய்வு செய்தார். மேலும் இக்குழு விவசாயிகளிடம் இத்திட்டத்தில் துறை மூலம் போர்வெல் அமைத்து, பயிர் சாகுபடி செய்து, வருமானத்தை பெருக்கும் வகையில் திட்டத்தினை பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொண்டார்.
தகவல் வெளியீடு
- Dr.M.நவீன் சேவியர், M.Sc.Agri:Ph.D
பட்டுக்கோட்டை விதை ஆய்வாளர்.
மேலும் படிக்க....
12 வது தவணைத் தொகை இரண்டு தினங்களுக்குள் (e-Kyc) அப்டேட் வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு!!
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்தாகும் ஆபத்து? என்ன காரணம்?
75 சதவீத மானியத்தில் இயந்திர புல் வெட்டும் கருவி விண்ணப்பிக்க அழைப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...