வேளாண் துறையின் கீழ் தனிநபர் விவசாயிக்கு ரூ.9600 மானியம் | மருந்து வாங்க தெளிப்பான் மானியம் !!


வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தை மேம்படுத்த மானியம். விவசாயிகள் பயன்பெற அழைப்பு. விவசாயிகளின் பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் வேளாண் துறையில் பல திட்டங்களில் மானியம் வழங்கப்படுகிறது.


புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி தரிசு நிலங்களைச் சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பினை அதிகரித்தல், வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல், உழவர்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்துதல் என்பது வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகும்.



இந்த நிலையில் வேளாண் துறையின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை மேம்படுத்தத் தனிநபர் விவசாயிகள் மற்றும் குழுமத்திற்கு மானியம் வழங்கப்படுவதாக மதுரை வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அதன் படி, நிலத்தில் வளர்ந்துள்ள புல், புதரை இயந்திரம் மூலம் அகற்றி லெவல் இயந்திரம் மூலம் சமப்படுத்தி உழ வேண்டும். இதற்கு ஆகும் செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ஒரு எக்டேருக்கு ரூபாய் 9 ஆயிரத்து 600 மானியம் வழங்கப்படுகின்றது. 13 வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். தனிநபர் விவசாயிகளுக்கு 480 எக்டேருக்கு ரூபாய் 46.08 லட்சம் மானியம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.


குழுமமாகச் செயல்படும் விவசாயிகளுக்கு 16 எக்டேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரப்பில் பயறு வகைப் பயிர்களைச் சாகுபடி செய்வதற்கு ஒரு எக்டேருக்கு ரூ.300 வீதம் 3400 எக்டேருக்கு ரூ.10.2 லட்சம் மானியம் வழங்கப்படுகின்றது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் இரண்டு எக்டேர் வரை மானியம் தரப்படும்.



நுண்ணூட்டக் கலவை, உயிர் உரம், உயிர் கட்டுப்பாட்டுக் காரணி, தொழு உரம் வாங்கினால் அதன் மதிப்பில் 50% அதிகபட்சமாக ஒரு எக்டருக்கு ரூபாய் 1500 வீதம் 207 எக்டேருக்கு ரூ.31.12 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கைத்தெளிப்பான், இயந்திர ஸ்பிரேயர் வாங்குவதற்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்!!



விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!



பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!



மேலும் தொடர்புக்கு....



எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.



நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

Time to Tips – 5

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post